
மத்திய அரசின் கப்பல் போக்குவரத்துத்துறையின் அங்கீகாரம் பெற்று , தூத்துக்குடி மாவட்டம் , அரசூர் பூச்சிக்காட்டில் இயங்கிவரும் ஜெயந்திநாதர் கடல் சார் பயிற்சி கல்லூரியில் பொது முறை மாலுமி பயிற்சிக்கு (ஜி.பி. ரேட்டிங் ) விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இது ஒரு இந்திய அரசு , கப்பல் போக்குவரத்துத் துறை அங்கீகாரம் பெற்ற , A1 தரச்சான்று பெற்ற பயிற்சி கல்லூரி ஆகும். இந்த பயிற்சியில் சேர்வதற்கு தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் ஆங்கிலத்தில் 40 சதவீதத்திற்கு மேலும் வயது 18 முதல் 25 வயது வரைக்கும் இருக்க வேண்டும். பாஸ்போர்ட் கட்டாயம் தேவை அல்லது பாஸ்போர்ட் விண்ணப்பித்து இருக்கவேண்டும் .வயது வரம்பில் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு ஐந்து ஆண்டு வரை விலக்கு வழங்கப்படும் மற்றும் டிகிரி அல்லது டிப்ளமோ படித்திருந்தால் இரண்டு வருடங்கள் சலுகை அளிக்கப்படும். இந்த பயிற்சியானது ஒவ்வொரு வருடமும் ஜனவரி முதல் தேதி மற்றும் ஜூலை முதல் தேதிகளில் தொடங்கி ஆறு மாதங்கள் நடைபெறும். இந்தப் பயிற்சி முடித்தவர்க...